Monday, February 18, 2008

நண்பர்களே!

அன்பான நண்பர்களே!

ஆறாவதறிவுப் பற்றி எழுதுவதால் என்னை ஒரு தத்துவ ஞானியாகவோ, அறிவியல் மேதையாகவோ நினைத்துவிடாதீர்கள். நான் மிக மிகச் சாதாரனமானவள். மாறக பலராலும் சொல்லப்படும் கருத்துக்களை அப்படியே ஏற்பவளுமல்ல கேட்பவளுமல்ல, அதேவேளை ஏற்காதவளுமல்ல.

எதையும் எனது ஆறாவதறிவுக்கு உற்படுத்தி அது ஏற்புடையதா? இல்லையா? என்பதை ஆராய்ந்து அறியும் சாதாரன ஒரு மனிதப்பிறவியின் கருத்து வெளிப்பாடுகளே இந்த வலைத்தளம்.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியையும், அறிவியல் உச்சத்தையும் கூடத் தத்தமது பிரச்சாரத்திற்கும் வசதிக்கும் ஏற்றாற்போல், கருத்துருவாக்கத்தை உருவாக்கி, உண்மை ஒருப்புரம் இருக்க உண்மைக்கு புறம்பான விளக்கங்களைக் கொடுத்து சமூக சீரழிப்புக்களை மேற்கொள்ளும் பல அமைப்புக்களின் செயல்களையும், இனவெறியர்களையும், மதவாத மனநோயாளர்களையும் கண்டு கொதிக்கும் வேளை என்னுள் எழும், எனது ஆறாவது அறிவின் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு இங்கே, இந்த வலைப்பதிவில் பதில் கூறவிளைகின்றேன்.

இதில் எந்த ஒரு அமைப்பையும், மதத்தையும், இனத்தையும், தனிமனிதனையும் தாக்கும் அல்லது நோகடிக்கும் நோக்கம் கொண்டதுமல்ல. சமுதாயச் சீர்கேடுகளையும், காலக்காலமாக இருந்துவரும் மூடக் கருத்துக்களையும், அறிவியல் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவதே இந்த வலைப்பதிவின் நோக்கமாகும்.

இந்த வலைத்தளத்தின் பதிவுகள் வெறுமனே ஆதாரமற்ற வீண் விவாதங்களுக்கான வித்திடமாக அமைந்துவிடக்கூடாது.

"வீண் விவாதம் சண்டைக்கான துவக்க விழா, ஆனால் அறிவுத் தர்க்கமே உண்மைக்கான திறவுக்கோள்."

எந்த ஒரு கருத்துக்கும் எதிர்கருத்து இருக்கின்றது. எனது எந்த கருத்துக்கள் தொடர்பாகவும் நீங்கள் கேள்வி கேட்கலாம்.

உங்கள் கேள்விகளை பகுத்து அறிந்து, உங்களது ஆறாவது அறிவின் வெளிப்பாடாக அதே வேளை மனித நாகரீகத்துடன் கேளுங்கள்.

நன்றி!

2 comments:

வடுவூர் குமார் said...

திடிரென்று இப்படி கேட்டால்???

சரி...

நாம் ஏன் சிந்திக்கிறோம்?

சின்னப்பொண்ணு said...

//திடிரென்று இப்படி கேட்டால்???//

எப்படி?