Tuesday, March 11, 2008

இன்று அதிகாலை வானத்திலிருந்து திருக்குறள் விழுந்தது

ஆமாம் இன்று சரியாக அதிகாலை 5.18 மணியளவில் வானத்தைப் பார்த்தால், பிரகாசமாக வால்நட்சத்திரம் போன்று ஒன்று வந்து விழுந்தது. ஓடிப்போய் விழுந்த இடத்தில் என்னவென்று பார்த்தால், என்ன அதிசயம்! அது திருக்குறள் புத்தகம். இப்படி ஒரு கதையை நான் சொன்னால் நீங்கள் என்னை பைத்தியக்காரி என்பீர்கள்.

எழுத்தை கண்டிப்பிடித்ததில் அல்லது உலகிற்கு அறிமுகப் படுத்தியதில் பல் வேறுப்பட்ட கருத்துக்கள் நிழவுகின்றன. ஆனால் கடதாசியை கண்டுப் பிடிக்கப்பட்டது எத்தனையாம் ஆண்டு? யாரால் கண்டுப்பிடிக்கப்பட்டது? என்பது பலருக்கு தெரியும்.

எழுத்தறிவு என்று வளர்ச்சியடைந்தது?

புத்தகங்களாக என்று எழுதத் தொடங்கப்பட்டது?

எழுத்துக்கள் அச்சு எழுத்துக்களாக என்று உருவானது?

எழுத்தாய்வாளர்களால் எந்த ஒரு பழங்கால எழுத்தையும் ஆய்வு செய்து, அது எத்தனை வருடங்கள் தொன்மையானது, குறிபிட்ட எழுத்து வடிவங்கள் எந்த காலத்தில் வழங்கப்பட்டது, என்றெல்லாம் ஆய்வு அறிக்கைகளை, ஆதார பூர்வமாக அறிவித்துக்கொண்டிருக்கின்றனர்.

50 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களான டைனோசர் காலத்தையும் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கைகளுடன் திரைப்படமாக வெளியிடப்படுகின்ற காலம் இது.

இத்தனை அறிவியல் நுட்ப வளர்ச்சிகள் மிகுந்த இவ்வுலகில், நான் வானத்திலிருந்து திருக்குறள் விழுந்தது என்றால் நீங்கள் நம்பவா போகின்றீர்கள்? நம்பமாட்டீர்கள். ஆனால் ஒரு சாரரால் வானத்தில் இருந்து புனித நூல் விழுந்தாக புருடா விட்டுக்கொண்டிருக்கிறார்களே, இவர்களின் அறிவை என்னவென்று கூறுவீர்கள்?

அறிவாளிகள் என்றா? அடிமட்ட முட்டாள்கள் என்றா? மதவாத மனநோயாளிகள் என்றா? நீங்களே கூறுங்கள்.

1 comment:

Anonymous said...

sir u live in sivakasi..i also live in sivakasi.my web address:anbu-openheart.blogspot.com